kalaimathi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kalaimathi |
இடம் | : kamayagoundanpatty,cumbum, tamilnadu |
பிறந்த தேதி | : 09-May-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 7 |
விவசாயம். கவிதை வாசிப்பதில் அதிக ஈடுபாடு .எப்போதாவது கவிதை எழுதுவதுண்டு.
என் இதயத்தில் நிறைநதிருக்கும்
உன் நினைவுகள் போல
என் இன்பாக்சில் நிறைந்திருக்கிறது
உன் எஸ்.எம்.எஸ். கள்.
உன்னோடு
பேசிய நேரத்தைவிட
உனது மிஸ்டுகால்களுக்காக
காத்திருந்த நேரமே அதிகம்.
என்னை அழைக்கும் போதெல்லாம்
எனது எண்ணங்களை வெளிப்படுத்த
தேர்வு செய்து பொருத்தியுள்ளேன்
காலர் டியுன்கள் .
உன் அழைப்புகள் எல்லாம்
மிஸ்டுகால்கள் ஆகிப்போவதால்
பொசுங்கி போகின்றன
காலர்டியூன்களோடு
எனது எண்ணங்களும்.
நான் அழைக்கும் போதல்லாம்
தொலைதொடர்புக்கு
அப்பால் இருப்பாதாகவே
உன் கை பேசி அறிவிக்கிறது .
நீ விலகியிருப்பது
தொலை தொடர்புக்கு அப்பாலா?
நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்
சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்
சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.
மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்
வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன
இலை