எனது கைபேசியும் நீயும்

என் இதயத்தில் நிறைநதிருக்கும்
உன் நினைவுகள் போல
என் இன்பாக்சில் நிறைந்திருக்கிறது
உன் எஸ்.எம்.எஸ். கள்.
உன்னோடு
பேசிய நேரத்தைவிட
உனது மிஸ்டுகால்களுக்காக
காத்திருந்த நேரமே அதிகம்.
என்னை அழைக்கும் போதெல்லாம்
எனது எண்ணங்களை வெளிப்படுத்த
தேர்வு செய்து பொருத்தியுள்ளேன்
காலர் டியுன்கள் .
உன் அழைப்புகள் எல்லாம்
மிஸ்டுகால்கள் ஆகிப்போவதால்
பொசுங்கி போகின்றன
காலர்டியூன்களோடு
எனது எண்ணங்களும்.
நான் அழைக்கும் போதல்லாம்
தொலைதொடர்புக்கு
அப்பால் இருப்பாதாகவே
உன் கை பேசி அறிவிக்கிறது .
நீ விலகியிருப்பது
தொலை தொடர்புக்கு அப்பாலா?
என் தொடர்புக்கு அப்பாலா?