இணையதளமும் நானும்

யாதுமாகி நிற்கின்றாய்
நீ
ஏதும் இல்லாமல் ஆகி விட்டேன் நான்

எலிப்பொறியின் ”வலை” க்குள்
சிக்க வைத்தாய்
என்னை
விட்டுவிலக
முடியவில்லை
உன்னை

"ஆன்லைனில்" இருக்கிறாய் நீ
"ஆப்லைனில்" இருக்கிறேன் நான்

நொடிப்பொழுதில் பல கணக்கை
போட வைத்தாய்
எப்பொழுதும் என் மனக்கணக்கை
மறக்க செய்தாய்

”அப்லோடும்”,”டவுன்லோடும்”
நடக்கிறது
என்
மனத்தட்டில்
எதுவும் பதிவாகாமலே

உன்னோடு தொலைந்த என் பொழுதுகளில்
தொலையாத என் ஞாபகங்களை
ஞாபகப்படுத்துவதும்
நீதான்

என்னைச் சார்ந்திருந்த
என்
அலுவலகப்பணிகூட
இப்பொழுது
உன்னைச் சார்ந்து...........

என் தன்னம்பிக்கையை விட
உன் நம்பிக்கை அதிகமாகி
விட்டது.

என் விரல்களுக்குள் நீ
லெப்ட், ரைட் போட்டாலும்
நான் செல்வது
என்னவோ
உன்
பாதையில் (”Path”) தான்

எதையும் தேடலாம்
உன்னில்
தொலைந்த என்
”தனித்துவத்தை
எப்படி தேடுவது
உன்னில்

Search ......”நான்”

"No Record Found"

யாதுமாகி நிற்கின்றாய்
நீ
ஏதும் இல்லாமல் ஆகி விட்டேன் நான்

எழுதியவர் : ஹேமா பழனிகுமார் (23-Feb-13, 3:02 pm)
பார்வை : 112

மேலே