என் துணை
இன்ப போட்டியில்
இருவரும் இணைந்து
இதய பூர்வமாய்
பங்கு கொண்டு
ஓடிய ஓட்டத்தில்
ஆடிய ஆட்டத்தில்
வெற்றி இலக்கு
எட்டிய பட்சமதில்
சிந்தி விட்ட
வெந்துளி ஒன்றை
கருவென உள்கொண்டு
ஈர் ஐய்ந்து
மாதங்கள் எடைகூடி
நிற்பதில் நடப்பதில்
படுப்பதில் என
எல்லாவற்றிலும்
கட்டி,காத்து
கவனம் முழுவதும்
அதில் செலுத்தி
உப்பையும் உறப்பையும்
அறவே அகற்றி
பத்திய உணவையே
உட்கொண்டு
வேர்த்து விருவிருத்து
வார்த்து வடிவளித்து
துன்பமெனும் பெருங்கடலில்
மூழ்கி மூச்சிரைத்து
மரணத்தின் உச்சிதொட்டு
முத்தொன்றை ஈன்றெடுத்து
பரிசெனவே எனக்களித்து
தந்தை என
பட்டம் சூட்டீ
ஆனந்த ஆறொன்று
மெய்விழிகளில் வழிகையிலே
எனை இழுத்து
என் நெற்றி
பொட்டில் இச்சென
முத்தமிட்ட
என் துணையை
என்ன சொல்லி
நானும் போற்ற?
ஏதுவான வார்த்தைகளை
எம்மொழியில் நானும் தேட?
மனைவியை போற்றுவோம்