அடுத்த தாக்குதலுக்கு..

தீவிரவாதிகள்.. பயங்கரவாதிகள்..
நாம் வைத்த பெயருக்கு கச்சிதமாய்,
தான் பொருந்துகிறான்..!
சிறுவெறுப்பில் ஆரம்பித்த ஒரு சிறு விதை,
இன்று அசைக்கமுடியா ஆலவிருட்சமாய் நம் கண் முன்னால்..!
அவ்விருட்சத்தின் உரங்கள் மனித உயிர்கள்..!
குண்டுவெடிப்புகளும், உயிர்சேதங்களும்
முடிவில்லாத தொடர்கதைகள்....!
சிதறிக்கிடக்கும் உடல்பிண்டங்கள்..,
அவனுக்கான மணிமகுடங்கள்..!
ஏன்!!?? எதற்கு!??
என்ற கேள்விக்கு, தங்குதடையில்லாத
பலபதில்கள் அவனிடமிருந்து..!
கொள்கையாம்..! கொள்கை..!
உன் கொள்கைகளை மனமெனும் தராசுதட்டில் வைத்து.,
நிறுத்து பார்..!
உயிர் மதிப்பின் உன்னதம் அப்போது
தெரியும் உனக்கு..!
நேற்றுவரை குடும்பத்திற்கு ஒளி வழங்கிய விளக்குகள்..!
இன்று கருகி கிடக்கும் சடலங்களாய்..!
மிருகம் மிருகத்தையே தின்கின்றது..!
மனிதன் மனிதனையே கொல்கின்றான்..!
ஆறறிவு மனிதனுக்குள் ஐந்தறிவு குணாதிசயங்கள்..!
சிலவற்றை நினைத்து பார்க்கிறேன்..!?
அப்பா எங்கே!? என்ற குழந்தையின் கேள்விக்கு அம்மா,
என்ன பதில் சொல்லி கொண்டிருப்பாள் என்று..!??
மகனை இழந்து தரையை வெறிக்கும் தாய்க்கு காவலாய்,
இனி யார் இருப்பார்கள் என்று..!?
கணவனை இழந்து தவிக்கும் மனைவியின் வேதனையை,
யார் அறிவார் என்று..!??
இவையெல்லாம் நாம் நினைத்து இதயத்தில்
ஒரு கணம் சுமக்கும் வேளையில்..!,
எங்கோ, எவனோ, ஒருவன்,
கொடூர இதயத்தோடு அடுத்த தாக்குதலுக்கு ,
தயாராகி கொண்டிருப்பான்.... !