பச்சிளம் பாலகனே பாலச்சந்திரா!

பச்சிளம் பாலகனே பாலச்சந்திரா!
வீரம் விதைத்த வித்தே!
நீ முளையிடும் போதே
மூடர்களால்....
கிள்ளி எறியப்பட்டாய்...!

நீ வளரும் முன்னரே
வீணர்களால்
சுட்டு வீழ்த்தப்பட்டாய்...!
உன் தந்தையின் மரணம்
தந்த வலியைவிட...
உன் மரணத்தின்
நிழற்படம் தருதே
அதீத வலி...........
அதில் தெரியுதே...
பாலகனே! பாலச்சந்திரா!
உன் மரணத்தில் கூட
அப்......பாவிகளால்
அழிக்க முடியாத....

பால்வடியும்
உன் அப்பாவி முகம்...
வீரத்தின் வடிவாய்
உன் அப்பாவின் முகம்

என்றோ நீ இறந்தாலும்
எங்கேயோ நீ இறந்தாலும்
இன்று உன் இறப்பு
இவ்வுலகில் எங்கேயோ இருக்கும்
இதயம் உள்ளோரெல்லாம்
இரத்தக் கண்ணீர் சிந்த வைக்குதே!
மனிதநேயம் மாய்ந்ததே...! என்று.

உன் மரணம்
இன்னொரு யுகபுரட்சிக்கு
விதையாக விழுந்துள்ளது

இன்னும் மனித நேயம்
மாயவில்லை எனில்...
உன் மரணம்
ஒரு மாற்றம் தரும்..
அந்த அசிங்களர்களுக்கு
அழிவு தரும்...முடிவு கட்டும்

இங்கே இந்த அசிங்கனுக்கு
சிவப்பு கம்பளம் விரிக்கும்
அவலம் இனியும் தொடருமெனில்...
அதைவிட அசிங்கம் இல்லவே இல்லை!

இனியும் இந்த அசிங்கத்தின் நாடகத்தை
ஐ.நா.சபையும் வேடிக்கைப் பார்த்தால்...
அதைவிட அசிங்கம் இல்லவே இல்லை!

...............பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (23-Feb-13, 4:07 pm)
பார்வை : 104

மேலே