kanchi krishnakumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kanchi krishnakumar |
இடம் | : Kanchipuram |
பிறந்த தேதி | : 29-Dec-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 20 |
தேடல் மிகுந்தவன். அன்பினால் கட்டுண்டு கிடப்பவன். வாழ்க்கையை ஒவ்வொரு நொடியிலும் ரசிப்பவன்.
கடைசியாய்
உன் முகம்
தாங்க முடியாத அம்மா
குலுங்கியழுத அப்பா
கனமான மௌனத்துடன
அண்ணனும் அக்காவும்
பிரமை பிடித்த
உன்னவள்
கவிதைகளில் நான்
காலங்கள்
கழிந்துக் கொண்டிருக்கிறது
எப்போதாவது
தோன்றும்
உன் நினைவு
நினைவுகள்
பின்னோட்டத்தோடு
உனக்கென
கவிதையில் நான்
எனக்கென வெளி
கேள்விகளாய்
புதைந்துக் கிடக்கிறது
இருந்தால்
சொல்லி விடுங்கள்
சொல்ல
மறந்து போயிருக்கலாம்
வேலையழுத்தத்தில்
விட்டிருக்கலாம்
கனவின்
விழிப்பிற்குப் பிறகு
கலங்கலாய் நினைவு
கலைந்திருக்கலாம்
கடைசியாயென்று
தவிர்த்திருக்கலாம்
முகம் பார்த்து
பேச
தடுமாறியிருக்கலாம்
விளைவை நினைத்து
புத்திசாலியாய்
மறைத்திருக்கலாம்
பேச நினைத்து
பேச்சின் திசை
மாறியிருக்கலாம்
கவிதையாய்
கதையாய்
கடிதமாய்
எழுத நினைத்து
சோம்பலில்
பேசாமலிருக்கலாம்
இருப்பினும்
பேசி விடுவதே
நன்று
பொய்யாய்
சில உண்மைகள்
உண்மைகளாய்
சில பொய்கள்
வீண் விரயமாய்
வெளியாகும்
மூச்சுக் காற்று
பிரதி
பிரதிகளின்
பிரதி
பிரதிக்குள்
பிரதி
பிரதியின்
பிரதி
பிரதிகளுக்கு
பிரதி
பிரதியும்
பிரதியும்
பிரதியுமாய்
வாழ்க்கை
எழுதுவது
அற்புதமென
தவிர்த்து
தூக்கு வாளிகள்
கைகள் மாற்றி
சுமந்து
சுண்டல் விற்றிருக்கலாம்
நூலகத்தில்
கழித்த பொழுதுகளில்
சைக்கிள் கடையில்
பஞ்சர் ஒட்டியிருக்கலாம்
ஐநூறு கடனோடு
முன்றில் கருத்தரங்கம்
போனதற்குப் பதில்
டிரைவிங் லைசென்ஸ்
எடுத்திருக்கலாம்
வெட்டிப் பொழுதுகளாய்
கடற்கரையில்
இலக்கியம், சினிமா
எனப் பிதற்றியதற்கு
டைப்பிங் ஷார்ட் ஹேண்ட்
முடித்திருக்கலாம்
பைண்டு வால்யூம்களை
கண் விழித்து
படித்த நேரத்தில்
சர்வீஸ் கமிஷன்
தேர்வுக்கு படித்திருக்கலாம்
பிலிம் சொஸைட்டிற்கு
தவறாமல்
சென்றதற்கு
நைநாவுடன்
லாரியில் சென்றிருக்கலாம்
கடந்துப் போன
காலங்கள்
நி