இறந்து போனவன்
கடைசியாய்
உன் முகம்
தாங்க முடியாத அம்மா
குலுங்கியழுத அப்பா
கனமான மௌனத்துடன
அண்ணனும் அக்காவும்
பிரமை பிடித்த
உன்னவள்
கவிதைகளில் நான்
காலங்கள்
கழிந்துக் கொண்டிருக்கிறது
எப்போதாவது
தோன்றும்
உன் நினைவு
நினைவுகள்
பின்னோட்டத்தோடு
உனக்கென
கவிதையில் நான்
எனக்கென வெளி
கேள்விகளாய்
புதைந்துக் கிடக்கிறது