karthika - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : karthika |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 6 |
குன்றருகே ஒரு குரம்பை
குங்குமச்சிமிழ் போல ஒரு பாவை
அதிகாலையில் அல்கல் கல்வி
அந்திமாலையில் சிற்றில் கட்டி விளையாட்டு
கங்குல் முழுதும் ஓர்வு
விடிந்தால் தேர்வு முடிவுகள் வெளியீடு
தோல்வி என்ற கவ்வை பயம்
அவளை தூங்கவிடாமல் கங்குல் முழுவதும்
அன்னம் அயில் மறந்தாள்
கழனியில் கல் இடறி விழுந்தாள்
காழகம் முழுதும் ஒரே அசும்பு
இருப்பினும் அவள் கண்கள் முழுதும் ஒரே கனவு
சகடம் பூட்டி அத்தம் தனில் சென்ற
சகோதரனை எதிர்நோக்கும் தேன்மொழியாள்
கால்களில் உறவிகள் ஊர்வதை மறந்தும்
கடைகோடியவே கண்ணிமைக்காமல் எதிர்நோக்கும் கருவிழியாள்
சடுகுடு என்ற சகடம் சப்தம்
களிறு போல ஓடின கால
என்ன ஒரு வீரம்
இந்த சின்னசிறு உடல் கூட்டுக்குள்ளே !
களவாடியவனை கலபொழுதில்
துரத்தி தாக்கும் வல்லமை ...
தேனீயே ...
எனக்கும் கொஞ்சம் உன் வல்லமையை தாராயோ ...
"என்ன பாவம் செய்தேனோ
இந்த பிறப்பெடுத்ததற்கு ...
வசந்தகாலத்தில் பூத்து குலுங்கியும் ,
பனிக்காலத்தில் உடம்பில் உயிரை மட்டுமே சுமந்தும்
வாழ்ந்தும் வாழாமலும் ,
இறந்தும் இறக்காமலும்,
இப்படியும் ஓர் வாழ்க்கை...
கண்ணீருடன் பனிப்பிரதேச மரங்கள் "
மேகங்களின் சங்கமத்தில்
மழையின் ஜனனம் ...
மழைத்துளியின் சங்கமத்தில்
நீரோடையின் ஓட்டம் ...
நீரோடையின் சங்கமத்தில்
ஆறுகளின் பயணம் ...
ஆறுகளின் சங்கமத்தில்
ஆழ்கடலின் அரங்கேற்றம் ....
கடலோர காற்றில் கவிதைகளின் சங்கமத்தில்
ஓர் புதிய ஜனனம் .....காதல்
நம்மை சுற்றி
நாம் எழுப்பிய பாலங்கள்
இந்த வர்ணஜால உலகத்தில்
புதிராகவும் ,விந்தையாகவும் ,விநோதமாகவும்
தோன்றி மறையும்
விட்டில்பூச்சி மேகங்கள் ....