படபடக்கும் நிமிடங்கள்

குன்றருகே ஒரு குரம்பை
குங்குமச்சிமிழ் போல ஒரு பாவை

அதிகாலையில் அல்கல் கல்வி
அந்திமாலையில் சிற்றில் கட்டி விளையாட்டு

கங்குல் முழுதும் ஓர்வு
விடிந்தால் தேர்வு முடிவுகள் வெளியீடு

தோல்வி என்ற கவ்வை பயம்
அவளை தூங்கவிடாமல் கங்குல் முழுவதும்

அன்னம் அயில் மறந்தாள்
கழனியில் கல் இடறி விழுந்தாள்

காழகம் முழுதும் ஒரே அசும்பு
இருப்பினும் அவள் கண்கள் முழுதும் ஒரே கனவு

சகடம் பூட்டி அத்தம் தனில் சென்ற
சகோதரனை எதிர்நோக்கும் தேன்மொழியாள்

கால்களில் உறவிகள் ஊர்வதை மறந்தும்
கடைகோடியவே கண்ணிமைக்காமல் எதிர்நோக்கும் கருவிழியாள்

சடுகுடு என்ற சகடம் சப்தம்
களிறு போல ஓடின கால்கள்
விழிகளில் விழுந்த கண்ணீர் துளிகள்
......
வெற்றிக்கனியின் காரத்தை தாங்காமல் !!!

எழுதியவர் : (24-Sep-20, 11:24 pm)
சேர்த்தது : karthika
பார்வை : 102

மேலே