ஒரு சொல்லில் அடக்கம்

திரு, திருவாளர், திருமதி ,திருநங்கை,
திருநிறைச்செல்வன், திருநிறைச்செல்வி,
உயர்திரு, மேன்மைதங்கிய,
அதிவணக்கத்துக்குரிய, அதிமேதகு,
மாண்புமிக்க, தெய்வத்திரு,
மன்னர், மன்னாதி மன்னர்,மாமன்னர்,
மன்னர் குலதிலகம் மாவீரர் ,
சக்கரவர்த்தி, இளவரசன் , இளவரசி
சர்வாதிகாரி, சனாதிபதி, பிரதமர்,
மந்திரி,அமைச்சர், சேவகன், ஊழியன்,
ஏழை, பணக்காரன், நான், நீ ,அவன்
இன்னும் என்னென்னவோவெல்லாம்
தூங்கி எழும்ப மறந்துவிட்டால்
பிணம் என்னும் ஒரு சொல்லில்
அடங்கிவிடுகிறது
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Sep-20, 1:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 191

மேலே