சிவ தாண்டவம்

மாபெரும் நட்சத்திரம் சுழல மறந்தது
இறந்தது மாபெரும் 'கருங்குழியானது'
இப்படி வான்வெளியில் ஓயாமல் சுழலும்
விண்மீன்கள் ஒருநாள் சுழல மறந்து இறக்க
இப்படித்தான் ஒரு நாள் சூரியனும் உதித்தல்
மறைத்தல் மறக்கலாம் சொல்லொணா இருளில்
உலகை ஆழ்த்திட ...... ஆர்க்டிக்கில் பனி உறையாது
போகலாம் '''' மீண்டும் எப்போதும் உறையாது
சூரியன் இல்லாது ஒளி இழந்த இந்து
காணாது போக பகல் இரவு தெரியா உலகு

எங்கும் இருள் கார் இருள்
எங்கும் ஆழம் தெரியா நீ தேக்கம்
ஓலங்கள்.... சப்தம் அடங்க மயான அமைதி
அமைதியைக் கிழித்து ..... எங்கோ
எங்கிருந்தோ வந்த சலங்கை ஒலி....
உடுக்கை ஒலி ..... அங்காரா நடன ஒலி
வானில் இருளைக் கிழித்து ஒரு கண்ணைப்
பறிக்கும் ஓளி..... ஒரு நொடி அதில் கண்டேன்
'உக்கிர நடனம் ஆடும் சிவன்'
புரிந்தது ..... அழிக்க துடங்கிவிட்டான் 'அவன்'
பாவங்கள் கனம் தாங்காது.....

புதிய உலகொன்று படைக்க அவன்
எண்ணுகின்றானோ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Sep-20, 9:46 pm)
Tanglish : SIVA thaandavam
பார்வை : 108

மேலே