காசிமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  காசிமணி
இடம்:  இருக்கண்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2020
பார்த்தவர்கள்:  226
புள்ளி:  31

என்னைப் பற்றி...

வலைதள பேச்சாளர்,எழுத்தாளர்

என் படைப்புகள்
காசிமணி செய்திகள்
காசிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2022 9:47 am

விழியோரம் அவளை பார்த்தேன்
மனதோரம் அவள் நினைவை சேர்த்தேன்
எதேச்சையாக அவள் கரம் பிடித்தேன்
மீண்டும் அவள் கரம் பிடிக்க துடித்தேன்
அவளை கண்டும் காணாதது போல சில நேரம் நடித்தேன்
அவள் மனதில் நன் இருப்பதை ஒருவழியாய் கண்டுபிடித்தேன்
விழி வழியே சொல்லிய காதல் மொழிவழியே சொல்வது எப்போது என பூவினை வட்டமிடும் தேனியாய் பூவிதழ் அழகி அவளை வட்டமிடுகிறேன்.....

மேலும்

காசிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2022 9:36 am

இதழ்களுக்கு இடைப்பட்ட தேனை சுவைக்க தேனிக்கு அனுமதி வேண்டுமோ?
நித்தமும் தொடரட்டும் இப்பணி சத்தமின்றி.......

மேலும்

காசிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2020 10:54 pm

அடக்கம் அழகுதான்
ஆனால் அத்துமீறும்
உன் கூந்தல்
அதைவிட அழகு

மேலும்

காசிமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2020 10:53 pm

காக்க காக்க இயற்கையை காக்க
காக்க காக்க நம்தலைமுறையைக் காக்க
நோக்க நோக்க EIA வை நோக்க
நோக்க நோக்க அதை அன்னம்போல் நோக்க
பார்க்க பார்க்க EIA வை படித்துப்பார்க்க
பார்க்க பார்க்க அதை பகுத்தறிந்து பார்க்க
தாக்க தாக்க பெண்களை மிரட்டுபவர்களை
தடி கொண்டு தாக்க
தாக்க தாக்க நமக்கு எதிரானவற்றை
அறிவு எழுத்து கொண்டு தாக்க
வருக வருக காற்றைக்காக்க
கருப்புப்படை வருக
வருக வருக நீரைக்காக்க
நீலப்படை வருக
வருக வருக பறம்பு, மலை காக்க
பசுமைப்படை வருக
வருக வருக அனைத்து உயிர்காக்க
உழைக்கும் படை வருக
வருக வருக விவசாயம் காக்க
வேளான்படை வருக
வருக வருக ஒற்றுமையாய் வருக
ஓரணியில் திரள்க
தருக தர

மேலும்

காசிமணி - காசிமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2020 12:34 am

கன்னி உன்முகத்தை பார்க்கையில
கற்பனைக்கும் எட்டாத கவிதை பல
அருவி போல கொட்டுதடி அதை
குருவி போல நான் அருந்த
இன்பத்தில் மனம் திக்குதடி
உன்னழகில் சொக்கி நிக்குதடி

மேலும்

காசிமணி - காசிமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2020 5:14 pm

ஒத்தையடி பாதையிலே
நீயும் நானும் போகயிலே
சட்டென்று காத்தடிக்க
பனைஓலை அசையும் ஓசையிலே
பயத்தில் நம் கைகள் ஒன்றோடொன்று பிசையையிலே
வண்ணக்கிளிகள் பல இந்த
சின்னக்கிளிகள் இரண்டைக்கண்டு
காதல் கீதம் இசைக்கையிலே
பயம் விட்டு கண்கள் போட்டது ஒரு கட்டு
அதுவே நம் காதல்கட்டு அதை
அவிழ்க்க முடியாதென்பதால் அது
ஆனது கால்கட்டு

மேலும்

காசிமணி - காசிமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2020 11:01 pm

நான் உன்னால் பித்தனானேன்
ஆம்!
காதல் பித்தன்!!
என் பித்து எனது காதலின் வித்து
அந்த வித்து விதைத்து முளைத்து
விருட்சமாகி கொடுக்கும் கனியை
புசிக்க
கண்ணருகே கட்டியணைத்தபடி
கண்மணியே நீயிருக்க வேண்டுகிறேன்
எனது வேண்டுதலை பரிசீலிப்பாயா?
நான் வேண்டும் பரிசையளிப்பயா?
சொல்லடி கண்மணி......

மேலும்

காசிமணி - காசிமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2020 1:15 am

நித்தம் உன்னுடன் யுத்தம் செய்து
சத்தம் இல்லாமல் முத்தம் பெற்று
விழித்தெழுகிறேன் என் நித்திரையில் இருந்து....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே