என்னவளை கண்டு மலைத்தேன்
விழியோரம் அவளை பார்த்தேன்
மனதோரம் அவள் நினைவை சேர்த்தேன்
எதேச்சையாக அவள் கரம் பிடித்தேன்
மீண்டும் அவள் கரம் பிடிக்க துடித்தேன்
அவளை கண்டும் காணாதது போல சில நேரம் நடித்தேன்
அவள் மனதில் நன் இருப்பதை ஒருவழியாய் கண்டுபிடித்தேன்
விழி வழியே சொல்லிய காதல் மொழிவழியே சொல்வது எப்போது என பூவினை வட்டமிடும் தேனியாய் பூவிதழ் அழகி அவளை வட்டமிடுகிறேன்.....