கால்கட்டு

ஒத்தையடி பாதையிலே
நீயும் நானும் போகயிலே
சட்டென்று காத்தடிக்க
பனைஓலை அசையும் ஓசையிலே
பயத்தில் நம் கைகள் ஒன்றோடொன்று பிசையையிலே
வண்ணக்கிளிகள் பல இந்த
சின்னக்கிளிகள் இரண்டைக்கண்டு
காதல் கீதம் இசைக்கையிலே
பயம் விட்டு கண்கள் போட்டது ஒரு கட்டு
அதுவே நம் காதல்கட்டு அதை
அவிழ்க்க முடியாதென்பதால் அது
ஆனது கால்கட்டு

எழுதியவர் : காசிமணி (11-Apr-20, 5:14 pm)
சேர்த்தது : காசிமணி
பார்வை : 85

மேலே