அந்திச் சிவப்பு
அந்திச் சிவப்பு...
மடியப்போகும் நாளுக்காய் ஆதவன் சிந்திடும் உதிரக் கண்ணீர்.....
சந்திரன் வரவுக்காய் வான்மகள் இட்டுக் கொண்ட மருதாணி .....
பருவம் வந்த நிலவிற்கு வான்மகளின் ஆரத்தி ....
கதிரவன் முத்தத்தால் கன்னிப்போன மேகத்தின் கன்னம் ....
ஆடை களைந்த மேகத்திற்கு ஆதவன் போர்த்திய செந்நிறப் போர்வை....