neyyadupakkam jayaprakash - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : neyyadupakkam jayaprakash |
இடம் | : neyyadupakkam, kanchipuram, tamilnadu, India |
பிறந்த தேதி | : 08-May-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 6 |
நான் ஒரு ஆசிரியர். பிடித்தது அம்மாவின் நினைவுகள்... எனது மனைவியின்(மஹாலக்ஷ்மியின் அன்பும்),
எனது மகனின் மழலை சிரிப்பும், மழையும், இசையும், சாய்ந்து கொள்ள எனது நண்பர்கள்களின்(பாபு, சுந்தர்) தோள்களும், கிரிக்கெட், பாட்மிண்டன், சச்சின்... எனது கிராமம் நெய்யாடுபாக்கம், நான் படித்த நெ.ச.து.பள்ளியும், டான்போஸ்கோ பன்னூர் பள்ளியும், என்னை வளர்த்த எனது ஆசான்களும், எனதருமை மாணவர்களும்...
அன்பு
அம்மா
இரண்டும் வேறில்லை...
நீ என்னுடன் இருந்த நாட்களை எண்ணி
நான் உன் நினைவில் உன் இறந்த நாளை எண்ணி...
நான் பெற்றது வரமா?
இல்லை சாபமா?
குழப்பமே...
நீ என் அன்னையாய் இருப்பதால்
நான் பெற்றது வரமே...
நீ என்னை விட்டு இறந்திருப்பதால்
நான் பெற்றது சாபமே...
உன் அன்பை வெளிப்படுத்த
உன் மரணத்தை தவிர வேறு
உபாயம் இல்லையா என் அன்னையே?
இனி ஒரு பிறவி வேண்டும்...
அதிலும் நானே உனது சேயாக வேண்டும்...
அடுத்த பிறவிக்கான காத்திருத்தலுடன்
உனது அன்பு மகனாய் நான்...