amma

அன்பு
அம்மா
இரண்டும் வேறில்லை...

நீ என்னுடன் இருந்த நாட்களை எண்ணி
நான் உன் நினைவில் உன் இறந்த நாளை எண்ணி...

நான் பெற்றது வரமா?
இல்லை சாபமா?
குழப்பமே...

நீ என் அன்னையாய் இருப்பதால்
நான் பெற்றது வரமே...
நீ என்னை விட்டு இறந்திருப்பதால்
நான் பெற்றது சாபமே...

உன் அன்பை வெளிப்படுத்த
உன் மரணத்தை தவிர வேறு
உபாயம் இல்லையா என் அன்னையே?

இனி ஒரு பிறவி வேண்டும்...
அதிலும் நானே உனது சேயாக வேண்டும்...

அடுத்த பிறவிக்கான காத்திருத்தலுடன்
உனது அன்பு மகனாய் நான்...

எழுதியவர் : ந. ஜெயபிரகாஷ், ஆசிரியர், கா (23-Feb-13, 11:07 pm)
பார்வை : 216

மேலே