sankar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sankar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 4 |
உன் கண் பார்வைக்கு பலியான பனித்துளி நான்.....
உன் சின்னதொரு சிரிப்பிற்கு விழுந்தவன் நான் ....
உன் விரல் தொடும் நாளை எண்ணி கிடந்தவன் நான் ....
உன் ஒவ்வொரு அசைவையும் படித்தவன் நான்....
நான் ரசித்த பெண்களிலே எனை இழுத்த தேவதை நீ ...
எதற்கோ பிறந்த வாழ்க்கையிலே எனக்காக பிறந்தவள் நீ....
நீ சுவாசித்த காற்றையும் சேர்த்து நேசிக்க பிறந்தவன் நான் ...
உன் காதலன் நான்........
- கலியுக பாரதி
கருப்பு நிலவெடுத்து கண்களிலே பதித்ததைப்போல் ..
கண்களின் நடுவினிலே சின்னதொரு கருவிழிகள் ....
நீ பார்க்கின்ற பார்வையிலே என்னுயிரை நான் தொலைத்தேன் ...
நீ சிரிக்கின்ற போது வானவில்லில் நான் மிதந்தேன் ...
நிலவுக்கும் உனக்கும் வேற்றுமைகள் பெரிதல்ல ..
இருந்தாலும் உன்னைவிட நிலவொன்றும் அழகல்ல ...
உன்னை பார்ப்பவர் மனமே பைத்தியம் ஆகிறதே ..
உன்னை படைத்தவன் நிலைமை கவலைக்கிடம்தானோ ...
- கலியுக பாரதி
மதி முகத்தின் மறுமுகமாய் மண்ணில் பூத்தவளே
மனம்விட்டு புன்னகை செய் இன்று பிறந்தநாள் உனக்கு ...
நடமாடும் நதிக்கரையின் நக்கலாய் வந்தவளே
நன்நடையில் உலகம் சுற்று இன்று பிறந்தநாள் உனக்கு ...
கயவர்கள் நிறைந்த உலகில் கண்மணியாய் பிறந்தவளே
பூத கண்ணாடியுடன் பூமியை நேசி ...
தெளித்து வடிகட்டி வார்த்தைகள் பேசு...
வண்ணங்கள் போலதான் வாழ்க்கையும் கண்ணே
சிந்தித்து வண்ணம் தீட்டு எதிர்காலம் ஓவியமாகும் ...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி...... கலியுக பாரதி.
அந்தி சாயும் நேரத்தில் அடிவானம் தூரத்தில் அழகாக தெரியும் சிவப்பாக ,
என்னவளின் இதழ்களும் வெட்கம் வரும் தருணத்தில் சிவப்பாக தெரியும் அழகாக..
மார்கழி மாதத்து பனித்துளி அவள் பாதம் ...
கார்த்திகை மாதத்து தீபம் அவள் கண்கள் ....
வண்ணங்கள் இல்லாத வானவில் அவள் புருவம்....
வரையறுக்க முடியாத வளைவு அவள் இடை ...
வரம்பு மீறாத எண்ணம் அவள் உடை ...
தெளித்து வடிகட்டப்பட்ட வார்த்தைகள் அவள் பேச்சு ....
ஆயிரம் வின்மினி பூச்சிகள் அவள் பார்வை ...
அழகுக்கான வார்த்தைகள் எல்லாம் அவளுக்கானது ...
அவள் கை தொடும் உரிமை மட்டும் எனக்கானது ...
கலியுக பா