பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி

மதி முகத்தின் மறுமுகமாய் மண்ணில் பூத்தவளே
மனம்விட்டு புன்னகை செய் இன்று பிறந்தநாள் உனக்கு ...
நடமாடும் நதிக்கரையின் நக்கலாய் வந்தவளே
நன்நடையில் உலகம் சுற்று இன்று பிறந்தநாள் உனக்கு ...
கயவர்கள் நிறைந்த உலகில் கண்மணியாய் பிறந்தவளே
பூத கண்ணாடியுடன் பூமியை நேசி ...
தெளித்து வடிகட்டி வார்த்தைகள் பேசு...
வண்ணங்கள் போலதான் வாழ்க்கையும் கண்ணே
சிந்தித்து வண்ணம் தீட்டு எதிர்காலம் ஓவியமாகும் ...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி...... கலியுக பாரதி.

எழுதியவர் : கலியுக பாரதி (18-Jul-19, 1:38 pm)
சேர்த்தது : sankar
பார்வை : 217

மேலே