உல்லாச பயணம்

உல்லாச பயணம்🌹

அன்பே, அழகே வா
ஆகாயத்தில் பறக்கலாம் ஆனந்தமாக.
இளங்காலை வேளை
ஈகையுடன் நம்மை அழைக்கிறது.
உல்லாச பயணம் இனிதே ஆரம்பம்.
ஊர்வலமாக வான வீதியில் நடந்தோம்.
ஐய்யமே வேண்டாம் உன்னை அன்பாக உரசியது
மேக கூட்டம் தான்.
ஒப்பனை இல்லாத அழகிய நிலவு எங்களை வரவேற்று, சிரித்தது.
ஓராயிரம் நட்சத்திர கூட்டம்
சிதறிய வைர கற்களாக
ஜொலித்தது.
அஃதே முடிந்தது எங்கள் பயணமும், மிக்க மகிழ்ச்சியாய்.
- பாலு.

எழுதியவர் : பாலு (18-Jul-19, 3:05 pm)
சேர்த்தது : balu
Tanglish : ullaasa payanam
பார்வை : 89

மேலே