thulam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thulam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  8

என் படைப்புகள்
thulam செய்திகள்
thulam - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 7:58 pm

ஆதிவாசி ஆதாம் ஏவாள் முதல்
ஆதிக்க ஏவலிடும் அறிவியல்வாசி வரை
தாங்கி தாங்கி சுழலும் பூலோகமே
வாழ்துக்கள் உமக்கு எம் வாழ்த்துக்கள்
இனிய 2014 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கண்டங்கள் பலவொரு மேனி பாகங்கள்
பூமத்தியம் மண்டல நரம்பு கோர்வைகள்
மையத்து புவியீர்ப்பு தேகத்து உயிர்த்துடிப்பு
துடிப்போட, நான்கில் மூன்று நீர்நிலைகள்
திரண்ட பசுமை வற்றிடா நிறைவூற்று
சுழன்று சுற்றுமுனை சுற்றி உயிர்காற்று
காலம் உருண்டோட வருடம் சேர்ந்தோட ;
கூடுவது முதுமையல்ல, பாரம்பரிய தொன்மை
வயதேற இளமை எழில்கூடும் வரமுமது
வணங்கி வாழ்த்து விளம்பிடும் சிரமெமது

மேலும்

thulam - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 7:59 pm

மகள்: என்ன செய்றம்மா?
தாய்: பெட்டி ஒரே நாத்தமா இருக்கு, ஸ்ப்ரே அடிச்சிட்டு இருக்கேன்
மகள்: அப்பாவும் ஸ்ப்ரே அடிக்கறது நாத்தம் வராம இருக்கத்தானா, பேஷன்னு சொல்றாரு?!

மேலும்

நல்ல கேள்வி. நாற்றத்திற்காகத் தானே. நன்று நண்பரே 15-Jan-2014 10:25 pm
thulam - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 7:48 pm

முதலாளி: பவர் இருந்தா யார் வேணும்னாலும் பெரியாளாயிடலாம்

தொழிலாளி: எனக்கும் பத்து வருசமா பவர் இருக்கு நான் பெரியாள் ஆகவே இல்லையே

முதலாளி: என்னடா சொல்ற?!

தொழிலாளி: என் கண் பவரத்தான் சொல்றேன் என்றான் அப்பாவியாக கண் கண்ணாடி காட்டியவாரே!

மேலும்

thulam - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 7:34 pm

கிராமங்கள் கரைந்து நிறுவனங்கள் வந்திட்டு
விவசாயம் இளைத்து விலைவாசி ஏறிட்டு
விளைநிலம் சுருங்கி விண்மாடி விளைந்திட்டு
ஆகாயம் குறுகி ஆலம்பழம் ஆகிட்டு
பூலோகம் நெருங்கி கணினியில் போகிட்டு
உழைப்பு நொறுங்கி நிர்வாகம் விரிந்திட்டு
தேவைகள் பெருகி போகம் பெருகிட்டு
தெளிவை மௌனித்து மடமை பேசிட்டு
வயிரின் தேவையோ மாறாது நிலைத்திட்டு
உணவே, உடலில் ஓட்டத்தை ஓட்டிட்டு
வெம்பும் மனதில் சமாதான பாலிட்டு
சுழற்சியில் மலர்ச்சி வருமென நம்பிட்டு
மார்கழி போகையில் போகத்தை பொசுக்கிட்டு
உத்ராயணத்தில் உள்ளதை இல்லாரொடு பங்கிட்டு
உதவிடும் கால்நடை மங்கள மலரிட்டு
காணும்நாள், காக்கும் பூதங்களை கும்பிட்டு

மேலும்

இன்றைய பொங்கலின் நிலைமை..! 15-Jan-2014 8:56 pm
thulam - சாமுவேல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 1:16 pm

உண்மை காதல் இல்லை என்றால்....
உண்மையான கவிதைகள் இல்லை என்றா அர்த்தம்...?

மேலும்

கவிதை என்பது உடலேன்றால் காதல்தான் அதன் உயிர் உயிரின்றி உடல் உண்டு ஆனால் வெறும் பிணமென்று அதற்கு பெயருண்டு ......... 19-Dec-2013 9:35 pm
இருட்டு வெளிச்சம் போல் காதல் இரு வகை - பொய்/ நிஜம் 19-Dec-2013 7:42 pm
நிழல் பொய்யாகலாம் நிஜம் உண்மையன்றோ கவிதை நிஜம்; காதல் நிஜமல்லாமலும் ஆகலாம் 19-Dec-2013 7:40 pm
உண்மையா பொய்யா என்று கேட்பது முதலில் காதலே இல்லை 19-Dec-2013 5:38 pm
மேலும்...
கருத்துகள்

மேலே