tamizhazhagan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tamizhazhagan
இடம்:  பிறப்பிடம் காரைக்குடி செ
பிறந்த தேதி :  15-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2013
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  9

என்னைப் பற்றி...

உள்ளத்தில் பட்டதை உள்ளபடி மட்டுமே சொல்ல தெரிந்தவன்.

என் படைப்புகள்
tamizhazhagan செய்திகள்
tamizhazhagan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2014 3:25 pm

வெள்ளகாரண்ட நாட்ட வாங்கி
கொள்ளகாரண்ட குடுத்துபுட்ட – அவன்
கொள்ளையடிச்சி கொள்ளையடிச்சி
கோடி கோடியா குமிசுபுட்டான் …

மக்களாட்சி என்று சொல்லி
மக்களை நீ எச்சுபுட்ட – ஏழை
மக்களோட வாழ்கை மட்டும்
எப்பவுமே மாறலையே …

100 ரூவா செலவு பண்ணி
நெல்லுமணி விளைய வச்சேன் –
வெளஞ்ச நெல்லை 50 ரூவாகி
அரசாங்கம் கேக்குதையா

தாத்தன் பட்ட கஷ்டத்துக்கு
பென்சன் பணம் வாங்க போனே
100 குடு பென்சன தரேன்னு
தபால்காரே சொல்லிபுட்டான்

ஜாதிச்சன்று வாங்க நானும்
வருசைல நின்னுருந்தேன் - பணத்த
அடில வச்சா நொடில முடயுனு
வி -ஏ-ஓ சொல்லிப்புட்டான்

லைசென்சு

மேலும்

அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 1:37 pm

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய

மேலும்

நன்றி ஐயா :) 10-Nov-2014 1:01 pm
சாப்பிடும் முன் நன்றி சொல்லி தெய்வத்தை வணங்கிடுவர் சிலர்.. ஆனால் அனைவருமே சிந்திக்க வேண்டியதை சொல்லும் கவிதை ..அருமை! 10-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே 28-Mar-2014 2:05 pm
"சிந்திப்பீர் உண்ணுமுன்னே இல்லாதோர் நிலைமையினை சிந்தனையில் நினைத்திடுவீர் நம்மை விட தாழ்ந்தவரை..." இல்லாதோர் நிலையை நினைவூட்டுகிரது உங்கள் வரிகளும், வலிகளும். 28-Mar-2014 12:50 pm
tamizhazhagan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2014 2:03 pm

காவிரியில் இல்லையடி தண்ணீர்
எங்கள் கண்களில் ஓடுதடி கண்ணீர்

வேலை இல்லை விடியவில்லை
விடி வெள்ளி தோன்ற வில்லை
வேங்கை போல் இருந்த மக்கள்
வேதனையில் வாழ்கின்றோம்

காவல் நிலையம் எத்தனையோ
காணவில்லை சந்தோசம்

இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்

கஷ்மீரில் பயங்கரவாதம்
கண்டவர் கண்களில் கண்ணீர்

ஈழத்தமிழர் படுகொலை
இந்தியா முழுவதும் கண்ணீர்

எதிர்கால ஒளி விளக்கு
எரிந்ததோ நூற்றுக்கணக்கு
குடிசையில் பள்ளி எதற்கு
குழந்தைகள் பழி அதற்க்கு

இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்

கண்ணீர் எங்கும் ஒழுகுதடி -

மேலும்

சிறப்பு.. உணர்வுப்பூரவமான படைப்பு.. 08-Jan-2014 4:13 pm
தமிழழகனின் உணர்வும் அருமையே 08-Jan-2014 2:45 pm
tamizhazhagan - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 6:16 pm

தமிழர்கள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது சரியா?

மேலும்

சரியே வருடத்தின் முதல் தொடக்கம் ஆங்கில புத்தாண்டு....தமிழன் ஆங்கிலம் பேசும் பொழுது ஏன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட கூடாது ..... 29-Jan-2014 3:51 pm
நம் அடையாளங்களையும் நாம் தொலைத்துவிடக்கூடாது. ---மிகவும் உண்மை நமது கலாச்சாரங்களின் அடையாளம் இந்த கொண்டாட்டங்களில்தான் இருக்கிறது கலாச்சாரம் இந்த நாட்டின் மதத்தில் பிறப்பெடுத்தவை .அதை பிரிக்கவோ மறுக்கவோ மாற்றவோ முடியாது இதற்கு பலவிதமான வர்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் வாதிகள் . சீனா ஒரே நாடு ஒரே மொழி. அருகில் உள்ள கேரளத்தைப் பாருங்கள் ஓணம் முழுக்க முழுக்க இந்துப் பண்டிகை எல்லோரும் அதைக் கொண்டாடுகிறார்கள் மதத்திற்கு அப்பால் சென்று கேரளத்தின் கலாச்சார அடையாளமாக அது கொண்டாடப் படுகிறது. கேரளத்தின் மொழி மத இன சமூக வாழ்வினை சற்று உற்று நோக்கினால் மலையாளம் என்ற அகன்ற கான்வாஸில் பல வண்ணங்களில் வரைந்த ஓர் அழகிய ஓவியம் போல் இருக்கும் நன்றி . வாழ்த்துக்கள் Rasaikavibala 18-Jan-2014 3:55 pm
வணக்கம் கல்பனா பாரதி, உங்கள் கருத்து ஏற்புடையதே. சீனாவில் அவர்களுக்கென்று புத்தாண்டு உள்ளது அதை அவர்கள் விமரிசையாக கொண்டாடிவருவதை நாம் பார்க்கிறோம். தமிழருக்கென்று ஆண்டு வரிசை இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் தான் கொண்டாடவேண்டும். எல்லாம் கணினிமயம் ஆனபிற்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரை ஏன் மாதவிலக்கு கூட ஆங்கில தேதியில் தான் ஞாபகம் வைக்கப்படுகிறது. .இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டைப் புறக்கணிக்க முடியாது அதே வேளையில் நம் அடையாளங்களையும் நாம் தொலைத்துவிடக்கூடாது. 18-Jan-2014 11:04 am
கேள்வியே தவறாக படுகிறது புத்தாண்டு என்பது உலகமே கொண்டாடுது தமிழர்கள் ஏன் தமிழ் புத்தாண்டை சிறப்புற கொண்டாடுவதில்லை என கேட்டிருந்தால் சரியென படுகிறது 09-Jan-2014 6:38 am
tamizhazhagan - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 5:34 pm

காசு வாங்காமல்
ஊசிபோடும் டாக்டர்

போனஸாகத் தருவார்
புதுப்புது நோயை!


இலவசம் இலவசம்
ஏமாற்றமாட்டார்!

மேலும்

இங்கு அதற்கு தானே மூட்டை நாட்டு வைத்தியர் இருக்கிறார் ஹிஹிஹி :) 08-Jan-2014 11:12 am
கொலை பண்ணி வம்பிலே மாட்டிக்கொள்ள வேண்டாம். 08-Jan-2014 11:09 am
நன்றி பிரியா 08-Jan-2014 11:08 am
அன்பு கொசுக் கடி போதவில்லை போலிருக்கிறது. கொசு வைத்தியரிடம் கவனிக்கச் சொல்கிறேன் 08-Jan-2014 11:08 am
தாரகை அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2014 3:42 pm

வாளோடு உறை கட்டி இருப்பதுபோல்- உன்
காலோடு என்னுடல் கட்டிக் கிடந்திடுவேன்.

முதலிலே விடியலில் விழித்திடுவேன்- உன்
மூடிய விழிகளை ரசித்திடுவேன்.

அலுவல்கள் அவசரமாய் முடித்திடுவேன்- உனை
அவஸ்தைகள் பலதந்து எழுப்பிடுவேன்.

பாலோடு பட்சணங்கள் பகிர்ந்திடுவேன்- நீ
பருகும் அழகை கண்டு ருசித்திடுவேன்.

நூலோடு மலர்போலே சேர்ந்திருப்பேன்-உனை
நொடிப்பொழுதும் நீங்காத வரம் கேட்பேன்.

அலுவலகம் செல்லவும் அழுதிடுவேன்-பல
அழைப்புகள் தந்துன்னை அறுத்திடுவேன்.

குறுஞ்செய்தி மணிக்கொன்று அனுப்பிடுவேன்-உன்
குறு நகையை வெகுமதியாய் தினம்பெறுவேன்.

காதலனே கணவனே கன்னுக்குட்டி என்றெல்லாம்
கவிதைகள்

மேலும்

வருகையால் மகிழ்ச்சி கருத்திற்கு மிகுந்த நன்றிகள் ! 17-Jan-2014 3:16 pm
பல அடுக்கில் மதிய உணவு தந்திருப்பேன்-அதில் முதல் அடுக்கில் முத்த சீட்டு பதித்திருப்பேன். செம........ 17-Jan-2014 12:24 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றிகள்! 14-Jan-2014 6:43 pm
கடைசி வரிகள் நிறைய வீடுகளை நடப்பதுதான் .கிடைக்காத பொருட்களைக் கேட்டு அது கிடைக்கும்வரை கணவனை சில மனைவிகள் பிட்டு தின்பதும் சாராய் பிழிவதும். மற்றும்படி ஆசை அறுபதுநாள்தான். வித்தியாசமாக மோகம் முப்பது வருஷம் என்றால் வாழ்த்துக்கள். கவிதை நன்று, 13-Jan-2014 4:16 pm
tamizhazhagan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 2:30 pm

தொட்டால் சிணுங்கி நீ - உன்னை
தொடாமல் நேசிக்கும் தென்றல் நான்
முள் நிறைந்த கள்ளியில்
ஒளிந்துள்ள தேன் துளி நீ - உன்
மதுவை ருசிக்க வரும் தேன் ஈ நான்
காதலை உணரவைத்த காவியம் நீ - உன்னை
கவிதையில் வடிக்காத கவிஞன் நான்
காந்தகத்தின் வட துருவம் நீ - உன்னை
அடைய முயற்சிக்கும் தென் துருவம் நான்
காஸ்மீரில் மலர்ந்த
பணி படராத ரோஜாவே - உன்னை
பாதுகாக்க வந்த காவலன் (காதலன்) நான்
விண்ணில் ஒளிரும் வெள்ளி மலரே - உன்னை
தூரத்தில் நின்று ரசிக்கும் பார்வையாளன் நான்
தாமரை இலை நான் – என்னில்
ஒட்டாமல் விலகி செல்லும் தண்ணீர் நீ


என்றும் நி

மேலும்

tamizhazhagan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2013 10:44 am

காவிரியில் இல்லையடி தண்ணீர்
எங்கள் கண்களில் ஓடுதடி கண்ணீர்
வேலை இல்லை விடியவில்லை
விடி வெள்ளி தோன்ற வில்லை
வேங்கை போல் இருந்த மக்கள்
வேதனையில் வாழ்கின்றோம்
காவல் நிலையம் எத்தனையோ
காணவில்லை சந்தோசம்
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
காஸ்மீரில் பயங்கரவாதம்
கண்டவர் கண்களில் கண்ணீர்
ஈழத்தமிழர் படுகொலை
இந்தியா முழுவதும் கண்ணீர்
எதிர்கால ஒளி விளக்கு
எரிந்ததோ நூற்றுக்கணக்கு
குடிசையில் பள்ளி எதற்கு
குழந்தைகள் பழி அதற்க்கு
இதுதான் எங்கள் தேசம்
எங்கும் கண்ணீர் வீசும்
கண்ணீர் எங்கும் ஒழுகுதடி - அதில்
கலவர க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே