காதலனே கணவனே கன்னுக்குட்டி 0தாரகை0

வாளோடு உறை கட்டி இருப்பதுபோல்- உன்
காலோடு என்னுடல் கட்டிக் கிடந்திடுவேன்.

முதலிலே விடியலில் விழித்திடுவேன்- உன்
மூடிய விழிகளை ரசித்திடுவேன்.

அலுவல்கள் அவசரமாய் முடித்திடுவேன்- உனை
அவஸ்தைகள் பலதந்து எழுப்பிடுவேன்.

பாலோடு பட்சணங்கள் பகிர்ந்திடுவேன்- நீ
பருகும் அழகை கண்டு ருசித்திடுவேன்.

நூலோடு மலர்போலே சேர்ந்திருப்பேன்-உனை
நொடிப்பொழுதும் நீங்காத வரம் கேட்பேன்.

அலுவலகம் செல்லவும் அழுதிடுவேன்-பல
அழைப்புகள் தந்துன்னை அறுத்திடுவேன்.

குறுஞ்செய்தி மணிக்கொன்று அனுப்பிடுவேன்-உன்
குறு நகையை வெகுமதியாய் தினம்பெறுவேன்.

காதலனே கணவனே கன்னுக்குட்டி என்றெல்லாம்
கவிதைகள் தினம் சொல்லி கொன்றிடுவேன்.

பல அடுக்கில் மதிய உணவு தந்திருப்பேன்-அதில்
முதல் அடுக்கில் முத்த சீட்டு பதித்திருப்பேன்.

உன் நினைவோடு சமையலை செய்ததனால்
உப்பு புளி கேசரியில் மிகைத்ததனால்

மன்னித்து விடுயென்று ஒரு சீட்டும்
மறக்காமல் வைத்திடுவேன் தினம்தோறும்.

குட்டிப்போட்ட பூனைபோல் நடந்திடுவேன்-நீ
கூடு வரும் நேரத்திற்கு தவமிருப்பேன்.

கதிரவன் கண்ட மொட்டைப்போல் -உனை
கண்டதும் பரவசத்தில் பூத்திடுவேன்
.
எண்ணிற்கு எல்லை
இறுதியென்று ஏதும் இல்லை.

உன் மீது நான் கொண்ட
அன்பிற்கு அளவில்லை.

உன்னை பிட்டு பிட்டு தின்றிடவா? - இல்லை
சாறாய் பிழிந்து குடித்திடவா?

இப்படிக்கு
அன்பு மனைவி.

எழுதியவர் : தாரகை (7-Jan-14, 3:42 pm)
பார்வை : 249

மேலே