நிலவுலகும் நிலவாகும்
ஆதித்தனின் நல்வரவே நம்பூமிக்கு விடியல்.
ஆதிஅந்த உயிரினம் பெறும்
நல்வெளிச்சப்படையல்.
சோதிஅதனை கிரகித்து நிலவும் தரும் வெளிச்சம்.
மீதமுள்ள விண்மீன்களில் கண்சிமிட்டும்
வெளிச்சம்
கல்லும் ,கல்லும் உரசி மனிதன் கண்டான்
வெளிச்சம்
கண்ணாடிப்பேழைக்குள் எடிசனால் காணுகிறோம்
வெளிச்சம்
அணுஉலைகளாலும் பெறுகிறோம் பரவலாக
வெளிச்சம்
அதன் பின்விளைவு மோசமென ஜப்பானால்
உலகிற்கே வெளிச்சம்
வெளிச்சம் தேடி இருளில் விழ எவர்க்கிங்கு
சம்மதம்
வெளிதாங்கும் வெய்யோனே அணுஉலைக்கு
மாற்றானால் உன்னதம்
தீராத மூலப்பொருள் பெருங்கனல் பந்தாக மிதக்க
தீட்டவேண்டும் நாம் சூரியன் சார் திட்டங்கள்
பலப்பலசாதனங்கள் கதிர் விழும்படிநிறுவி
வைப்போம்
நிலவினைப்போல் ஆதவன் ஒளி பகலெல்லாம்
கிரகிப்போம்
நிலவொத்து இரவினையும் வெளிச்சத்தால்
ஒளிர்விப்போம்
நிலவுலகம் முழுமையும் ஒளியால் மலர்விப்போம்