இயற்கை
இயற்கைகளுக்கிடையே பட்டிமன்றம்
தாம் வரமா சாபமா என்று...
இயற்கை வரம் என்றால்
ஆளை இழுத்து செல்லும்
சுனாமியும்..
கட்டிடங்களை விழுங்கி செல்லும்
நிலநடுக்கமும்...
மரங்களை வேரோடு சாய்க்கும்
சூறாவளிகளும்...
சாபத்தில் சேருமோ!!!
இயற்கை சாபம் என்றால்
குளிர்க்கு இதமான
சூரியனும்....
இரவுக்கு ஒளியான
சந்திரனும்...
தாகம் தீர்க்கும்
மழையும்....
தென்றல் என வீசும்
காற்றும்..
வரத்தில் சேருமோ!!!
வரமோ சாபமோ
ஆனால் இயற்கை
இன்று...
வரங்களை அள்ளி தெளிப்பதும் இல்லை
சாபங்களை கொடுக்க மறப்பதும் இல்லை......