சிந்திப்போம்

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பையிலே துரித உணவாம்...

ஏன் சிந்திக்க தோன்றவில்லை
இல்லாதோர் படும்பாடு
ஏழைக்கு கொடுக்க வேண்டாம்
வீண்விரயம் தவிர்க்கலாமே ...

சிந்திப்பீர் உண்ணுமுன்னே
இல்லாதோர் நிலைமையினை
சிந்தனையில் நினைத்திடுவீர்
நம்மை விட தாழ்ந்தவரை...

-என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (8-Jan-14, 1:37 pm)
Tanglish : sinthippom
பார்வை : 1155

மேலே