அருவிக் கரையில் ஒரு குளியல் போடுவோமா
ஆத்துல குளிச்சி அலுத்துப் போச்சி
அதனால் வந்தேன் அருவிக் கரைக்கு...!
மீன்கடி இல்ல மிதக்கவும் வேண்டாம்
மெல்லவே விழுதே மழை நீர் ஜோரே..!
வழக்கமா முழிச்சி வழக்கமா குளிச்சி
வழக்கமா சிரிச்சி வழக்கமா நடிச்சி
வழக்கமா வழக்கமா வழக்கமா போயி
வாழ்க்கையே எனக்கு போரடிச்சுப் போச்சி...
எனக்குள் மீண்டும் நிறைவு வேண்டும்
என்றே நினைத்து குழந்தையாய் ஆனேன்...
ஆத்துல குளிச்சி அலுத்துப் போச்சி
அதனால் வந்தேன் அருவிக் கரைக்கு...!