2014

ஆதிவாசி ஆதாம் ஏவாள் முதல்
ஆதிக்க ஏவலிடும் அறிவியல்வாசி வரை
தாங்கி தாங்கி சுழலும் பூலோகமே
வாழ்துக்கள் உமக்கு எம் வாழ்த்துக்கள்
இனிய 2014 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கண்டங்கள் பலவொரு மேனி பாகங்கள்
பூமத்தியம் மண்டல நரம்பு கோர்வைகள்
மையத்து புவியீர்ப்பு தேகத்து உயிர்த்துடிப்பு
துடிப்போட, நான்கில் மூன்று நீர்நிலைகள்
திரண்ட பசுமை வற்றிடா நிறைவூற்று
சுழன்று சுற்றுமுனை சுற்றி உயிர்காற்று
காலம் உருண்டோட வருடம் சேர்ந்தோட ;
கூடுவது முதுமையல்ல, பாரம்பரிய தொன்மை
வயதேற இளமை எழில்கூடும் வரமுமது
வணங்கி வாழ்த்து விளம்பிடும் சிரமெமது

எழுதியவர் : thulam (20-Jan-14, 7:58 pm)
பார்வை : 69

மேலே