மரம் பேசினால்
உண்டெறிந்த விதை உள்ளிருந்து வந்து,
ஊன்றியிந்த வேர் மேலிருந்து நின்று ,
ஊறியிரைந்த நீர் உறிந்தே வளர்ந்து,
ஊர்நிறைந்த ஞாயிறு வெம்மையில் வாழ்ந்தேன்.
ஊர்ந்திடு மேகம் கவர்ந்திட மழை
உருக்கிடு நோய்க்கு பாகங்கள் மருந்து
உறைந்திடு ஊர்வன பறப்பன கூடு
உரிந்திடு பட்டை காகித கூழாம்
உண்டிங்கு மகிழ்ந்திட பூம்பழம் காய்
உளமங்கு குளிர்ந்திட இதமான நிழல்
உயிரிங்கு பிறந்திட தாலாட்டு தொட்டில்
ஊணங்கு சாய்ந்திட இறுதிக்கும் கட்டில்
உறவாடிய காற்றும் சுத்தமாகி சென்றது
உறுப்புகள் வீடாகி பொருளாகி விறகுமானது
உடலுருகி உயிருருகி எல்லாமான எனை
உணர்வுருகி வளர்க்கவிலை வெட்டிட தயக்கமிலை
உருக்கும் போதும் உடைக்கும் போதும்
உலுக்கும் போதும் உதைக்கும் போதும்
உபயோகமே, என்னால் உபத்திரவம் இல்லையே
உனர்ந்தெனை இனியேனும் வளர்ப்பீர் காப்பீர்