vinayputhu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vinayputhu
இடம்:  Ramathapuram
பிறந்த தேதி :  01-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2012
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  27

என்னைப் பற்றி...

.....................

என் படைப்புகள்
vinayputhu செய்திகள்
vinayputhu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Dec-2017 10:21 am

தேனென்ன இனிது
என் இரத்தத்தை விட...

செத்து மடிந்த
பீட்டா செல்கள் செய்தது இப்படி....

நூறு கடந்தால்
இனிப்பாகாதது
சர்க்கரை மட்டுமே...

திரண்டு கிடக்கும் சர்க்கரை
வறண்டு கிடக்கும் தொண்டை
சுரந்து கடக்கும் சிறுநீர்
பருகி அடங்கா தாகம்
என
எத்தனை
எத்தனை ....

தூங்கி கிடந்த
நாட்களுக்கு தான் - இன்று
துவண்டு எழுகிறேன்
நான்கு மணிக்கு...

உண்டு கொழுத்த
உடல் சிறுக்க -இன்று
உருண்டு புரளுகிறேன்
யோகா என்று...

ஓடி முடித்து
மூச்சு வாங்கும்போதெல்லாம்..
மூன்று பர்கர்
சேர்த்து தின்ற ஞாபகம்..

என்ன ஒரு அதிசயம்
வீட்டுக்கு
ஒரு குடிமகன் -
நீரிழிவோடு...

நடை பழகுவோம்
எட

மேலும்

நடைமுறை வாழ்க்கையில் பலருக்கும் உபயோகப்படும் கவிதை அருமை அண்ணா 21-Dec-2017 6:43 pm
vinayputhu - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 10:39 pm

அட கடவுளே..
என்ன இது வின் ஞானம்..

காடு கரை கழனியெல்லாம்
கண் கணிக்க
கணினியாச்சு..

தரிசு நிலம் உழுது போட
தங்க நெல்லு ஊன்றி விதைக்க
சமஞ்ச பயிறு அறுத்து குமிக்க...
எந்திரம் பல வந்தாச்சு..

கார்மேகம்
கண்ணீர் வடிக்க
கார்பன் டை ஆக்ஸைடு
வந்தாச்சு..

குட்டி குட்டி
சேதிஎல்லாம்
போன் ஆல
பட்டி தொட்டி சேந்தாச்சு..

முடமாக்கும் நோய்க்கெல்லாம்
நோ மோர் னு
அறிக்கை விட்டாச்சு..

திண்டு கொழுக்கும்
ஞானத்துக்கு
தீனி தீந்து போகாது..

கடவுளே..
பட்டினியாகும் போது
பணத்த திங்க முடியாது..

படிச்சு வளரும் மக்களுக்கு..
இயற்கைய
அணைச்சு வளர்க்க அறிவ குடு...

மேலும்

நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Nov-2015 12:12 am
vinayputhu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 11:39 am

டாஸ்மாக்
அது
மது சுரக்கும்
மடு....

மேலும்

நல்ல படைப்பு உணர்த்தல்கள் இன்னும் எழுதுங்கள் 04-Aug-2015 11:45 am
vinayputhu - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2015 12:39 pm

படகுக்கரையில்
பாடம் கற்றவரே....

போக்ரானையும் ப்ரித்வியையும்
புத்தியில் பூட்டி எடுத்து
புது டெல்லி வரை எடுத்து சென்றவரே...

விழிக்காத விதைக்கும்
கனவு காண கற்றுகொடுத்தவரே..

விளைநிலம் தேடி
விதைக்கும்
விஞ்ஞான விவசாயியே....

இன்று

வானம் தாண்டி
சிறகு விரித்ததென்ன
அக்னி சிறகே..


விழுங்கள் மழையாய்
காத்திருக்கிறோம்
விதையாய்....

மேலும்

நல்ல படைப்பு காலத்தின் போக்கில் கலாம் விளைந்ததன் காரணத்தால் அக்கினிச் சிறகுகள் சிறகொடிந்து போனது 03-Aug-2015 2:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே