வின் ஞானம்

அட கடவுளே..
என்ன இது வின் ஞானம்..

காடு கரை கழனியெல்லாம்
கண் கணிக்க
கணினியாச்சு..

தரிசு நிலம் உழுது போட
தங்க நெல்லு ஊன்றி விதைக்க
சமஞ்ச பயிறு அறுத்து குமிக்க...
எந்திரம் பல வந்தாச்சு..

கார்மேகம்
கண்ணீர் வடிக்க
கார்பன் டை ஆக்ஸைடு
வந்தாச்சு..

குட்டி குட்டி
சேதிஎல்லாம்
போன் ஆல
பட்டி தொட்டி சேந்தாச்சு..

முடமாக்கும் நோய்க்கெல்லாம்
நோ மோர் னு
அறிக்கை விட்டாச்சு..

திண்டு கொழுக்கும்
ஞானத்துக்கு
தீனி தீந்து போகாது..

கடவுளே..
பட்டினியாகும் போது
பணத்த திங்க முடியாது..

படிச்சு வளரும் மக்களுக்கு..
இயற்கைய
அணைச்சு வளர்க்க அறிவ குடு...

எழுதியவர் : (17-Nov-15, 10:39 pm)
Tanglish : vin nanam
பார்வை : 84

மேலே