நான் கம்பன் இல்லை
ஒடிந்த வில்லில்
உருவானது காதல்
உருவான காதல் விரிந்த போது
மணிமுடி அகன்றது
மரவுரி கிடைத்தது கானகப் பாதை விரிந்தது
கானக வீதியில் காதலியும் கை நழுவிப் போனபோது
காதலன் கதையை கவிதைகள் கண்ணீரில் எழுதியது
தேடிய காதலன் மீண்டும் வில்லை உயர்த்தி வென்றான்
காதலி கிடைத்தாள் மீண்டும் காவியமாகப்
பிறப்பெடுத்தது காதல் !
----கவின் சாரலன்