அரும்புகள் நிறுவன ஆண்டு நிறைவு விழாப் போட்டிக்கு

******************
அரும்புகள்!
******************

கொள்ளை கொள்ளும் அழகு!
குழந்தை தவழும் நிலவு!
அள்ளி நெஞ்சில் வைத்துக் கொஞ்சு;
அதுதான் நாளை உலகு!

களங்க மற்ற விழிகள்!
களிப்பில் ஆழ்த்தும் மொழிகள்!
பளிங்கு போல விளங்கும் பிள்ளை
பாசம் பொங்கும் கிளிகள்!

புஷ்டி யான கன்னம்!
பூரிப் போடு மின்னும்!
கஷ்டப் பட்டுப் பெற்ற பிள்ளை
காதல் தந்த சின்னம்!

பொக்கை வாயில் சிரிப்பு!
சொர்க்க வாசல் திறப்பு!
கெக்கெக் கென்று சிரிக்கும் அழகில்
கிறங்கிப் போகும் மனசு!

மடியில் இருந்து நழுவும்!
மண்டி போட்டுத் தவழும்!
அடி பிசகிக் கைம டங்கி
ஆடி அசைந்து கவிழும்!

அங்க மெங்கும் பருக்கை!
ஆச்சி மடியில் இருக்கை!
ஞங்ஞங் ஙென்று மெல்லும் அழகில்
ஞாலம் ஆட்டுப் புழுக்கை!

...............................................
..........................................
...................................................
....................................................
.........................................................
.............................................................
........................................................
....................................................
........................................................


அழகு மிளிரும் உலகு
அமைய வேண்டின் விலகு!
குழந்தை யைநீ பழக்க வேண்டாம்!
குழந்தை யாகப் பழகு!

எழுதியவர் : ராஜமாணிக்கம் (17-Nov-15, 10:43 pm)
சேர்த்தது : ராஜமாணிக்கம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 194

மேலே