மீண்டும் மீண்டும் என் இரவின் கனவு - செல்வமுத்தமிழ்

மீண்டும் மீண்டும்
பக்கம் வந்து
என் வெட்கம் தொலைக்கிறான்!

மீண்டும் மீண்டும்
என் கரம் பற்றி
கட்டில் சேர்க்கிறான்!

மீண்டும் மீண்டும்
எனை முத்தமிட்டு
சித்தம் கெடுக்கிறான் !

மீண்டும் மீண்டும்
என் அருகில் வந்து
ஆடை கலைக்கிறான்!


மீண்டும் மீண்டும்
என் காதுகடித்து
காதல் சொல்கிறான் !

மீண்டும் மீண்டும்
எனை கட்டியணைத்து
காமம் கொள்கிறான் !

மீண்டும் மீண்டும்
நான் வேண்டுகிறேன்
அவன் விழியோடு ஓர் உறவு !

முடியாமலேயே
கலைந்து விடுகிறது

மீண்டும் மீண்டும்

உனை (எனை) மீட்கா
என் இரவின் கனவு !

எழுதியவர் : chelvamuthtamil (17-Nov-15, 10:52 pm)
பார்வை : 195

மேலே