கலாம்

படகுக்கரையில்
பாடம் கற்றவரே....

போக்ரானையும் ப்ரித்வியையும்
புத்தியில் பூட்டி எடுத்து
புது டெல்லி வரை எடுத்து சென்றவரே...

விழிக்காத விதைக்கும்
கனவு காண கற்றுகொடுத்தவரே..

விளைநிலம் தேடி
விதைக்கும்
விஞ்ஞான விவசாயியே....

இன்று

வானம் தாண்டி
சிறகு விரித்ததென்ன
அக்னி சிறகே..


விழுங்கள் மழையாய்
காத்திருக்கிறோம்
விதையாய்....

எழுதியவர் : (3-Aug-15, 12:39 pm)
Tanglish : kalaam
பார்வை : 86

மேலே