நீரிழுவு நோய்

தேனென்ன இனிது
என் இரத்தத்தை விட...

செத்து மடிந்த
பீட்டா செல்கள் செய்தது இப்படி....

நூறு கடந்தால்
இனிப்பாகாதது
சர்க்கரை மட்டுமே...

திரண்டு கிடக்கும் சர்க்கரை
வறண்டு கிடக்கும் தொண்டை
சுரந்து கடக்கும் சிறுநீர்
பருகி அடங்கா தாகம்
என
எத்தனை
எத்தனை ....

தூங்கி கிடந்த
நாட்களுக்கு தான் - இன்று
துவண்டு எழுகிறேன்
நான்கு மணிக்கு...

உண்டு கொழுத்த
உடல் சிறுக்க -இன்று
உருண்டு புரளுகிறேன்
யோகா என்று...

ஓடி முடித்து
மூச்சு வாங்கும்போதெல்லாம்..
மூன்று பர்கர்
சேர்த்து தின்ற ஞாபகம்..

என்ன ஒரு அதிசயம்
வீட்டுக்கு
ஒரு குடிமகன் -
நீரிழிவோடு...

நடை பழகுவோம்
எடை உறுக்குவோம்
கடை ஒதுக்குவோம்
பிறகு
தேனென்ன
அமிழ்த்தென்ன
அனைத்தையும் தின்று
அளவோடு அடக்குவோம் - சர்க்கரையை...

எழுதியவர் : விநாயக மூர்த்தி பு (21-Dec-17, 10:21 am)
பார்வை : 59

மேலே