நா. காமராசன் குறிப்பு

(N.Kamarasan)

 ()
பெயர் : நா. காமராசன்
ஆங்கிலம் : N.Kamarasan
பாலினம் : ஆண்
இடம் : போ.மீனாட்சிபுரம் தேனி

நா. காமராசன் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழும் காமராசன் அவர்கள் மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் எழுதி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார் .இன்றைய புதுக்கவிஞர்களின் வரிசையில் முன்னனியில் நிற்பவர் நா.காமராசன். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தம் சிறப்பை வெளிப்படுத்தினார். "கவியரசு" என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார். இவர் கவிதைகளில் வேகம் அதிகம் இருக்கும். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உதவித் தொடர்பு அலுவலராகவும் பணியாற்றியவர். "தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.
நா. காமராசன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே