அவளின் அழகு

வஞ்சிக்கொடி போல இடை
அஞ்சத்தகு மாறுளது
நஞ்சுக்கிணையோ, அலது
அம்புக்கிணையோ, உலவு
கெண்டைக்கிணையோ கரிய
வண்டுக்கிணையோ, விழிகள்
மங்கைக்கிணை ஏதுலகில்
அங்கைக்கிணையோ மலரும்?

வானரசு தானிலவு போலுலக மாதரசு
நானினிது வாழும்வகை ஆனதிரு வானஉரு
மேனி அதுவோ அமிழ்து, வீசுமண மோமிகுதி
கானிடை உலாவுமயில் தானுமெனையே அணைய
நினையாளோ?


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 6:35 pm)
பார்வை : 79


பிரபல கவிஞர்கள்

மேலே