உவமைக்கு என்ன பஞ்சம்?

காசற்ற பூசலார் கருத்தினில் சமைந்து
விரிசடைக் கடவுட்கோர் பொற்றளி
மொகலாய மன்னனின் கண்ணீரில் உயர்ந்தது
யமுனைக் கரைதனில் அமரக்கோயில்
தலையலங்காரம் புறப்பட்டதே என்ற
கம்பனின் அருமை மைந்தன்
தலை கொய்து வெட்டினார்
துன்பியற் காதற்கேணி

செங்கோட்டு யாழினில் மீட்டியும்
வேய்குழல் ஊதியும்
ஓவியத்து எழுதவொண்ணா
உருவத்தை தீட்டியும்
திக்கெட்டும் அலைந்தார் உண்டு
காதற் கானம் கனத்து
பாட்டறி பாணனும்
யாப்பறி புலவனும்
கசப்பினைக் கவிழ்த்துப் போனார்

செதுக்கத் திறனில்லை தீட்டவியலாது
யாப்புத் தெரியாது மீட்டவும்
கற்றானில்லை

புலறியின் பரவசம்
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து போதி சீதம்
அலரியின் இடும்பை
செந்தழலின் சாற்றைப் பழிந்த காந்தாரிச் சாந்தம்

ஊமையின் கனவு
முடவன் பேராசை
அந்தகன் கண்ட களிறு

உவமைக்கு என்ன பஞ்சம்?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:50 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே