முப்பால் - பச்சைநாயகி

அதரப்பால் கொங்கைப்பால்

யோனிப்பால் என்றனர்

முப்பாலதனை

மாங்காய்ப் பாலுண்டு

மலைமேல் இருந்தாலும்

அறம் பொருள் இன்பம் அதுவேயாமோ

காதல் கரையிலாப் பரவச நிலையெனில்

காமம் செப்பினால்

பித்தப் பெருநிலை

பேயும் நோயும்

அன்றென்றான் குறுந்தொகைப் புலவன்

கள்ளுங் காமமும் தனித்த பெருங்கொடை

சிற்றின்பம் என்பதும் பேரின்பமாகும்

மனத்தின் மெய்யின் உயிரின் சங்கமம்

பறித்தும் நீட்டியும்

வாழ்ந்த துறவியர்

பிறப்பறுத்தல் என

உறுப்பறுத்தனர்

உயிரின் ஆற்றல்

உன்னற் பாலதோ


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:21 pm)
பார்வை : 0


மேலே