ஒப்பாரி

துவைத்து அலசினாற் போகாது
அக்கறை
யமன் நிறம் சாவின் சுவை
நாசி பொசுக்கும் கந்தம்
செவிக்குக் கொதி ஈயம்
குணம் வஞ்சம் சூது

ஏகலைவன் கர்ணன்
வாலி கோவலன்
ஈழத்து மாவீரன்
எனப் பலர் வாய்க்கரிசி

நட்டகல் பேசுமோ
நாதன் உலாப் போயபின்

துரித கதித் தாளங்கள்
துடைத்தெரிய மாட்டாத
துரோகச் சுரம் ஒலிக்கும்
எட்டுக்கட்டை எக்காளக்
காலடியில் தீனக் குரல்
நசுங்கும்.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:18 pm)
பார்வை : 0


மேலே