அன்னபூரணி

இங்கில்லாவிடினும்
அங்கெங்காவது
வீசிக்கொண்டே காற்று

இந்நாட்டில்
பொய்த்திருந்தாலும்
பெய்து கொண்டிருக்கும் பருவமழை

இவ்வடுப்புகள்
இன்றெரியாது போயினும்
எங்கெங்கோ அடுப்புகளில் தீ

இவ்வயல்கள்
இப்போது தீய்வுகண்டிருந்தாலும்
வரையாது வகைதோகையாய்வழங்கும்பூமி

சூரியசந்திரர்கள்
வளையவளைய
வந்தபடியேயிருக்கும் வானம்

அன்றுமின்றும் இனியுமென்றென்றும்
ஐம்பூதங்களின் தயவிலேதான்
ஆதிநாதன் ஸ்வரூபங்கள்


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:36 pm)
பார்வை : 76


மேலே