தமிழ் கவிஞர்கள்
>>
விக்ரமாதித்யன்
>>
கண்ணாடி கலைஞர்கள்
கண்ணாடி கலைஞர்கள்
முன்னாடி
இருந்து சாதகம் செய்த இசையரசு
கண்ணாடி
முன்நின்று
பாவனைகள் வளர்த்திய கலைக்குரிசில்
கண்ணாடி
பார்த்து
அபிநயிக்கும் கலையரசி
கண்ணாடி
ரசித்துவாழும்
கன்னிப்பெண்கள்
கண்ணாடி
பதித்த
பள்ளியறை கட்டுவித்த பேரரசு
கண்ணாடி
கண்டுகண்டு
காதலுறுகிறார்கள் கலைஞர்கள்
கண்ணாடி
காலங்காலமாக
கமுக்கமாக!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
