பொங்கும் கடலோசை

பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை... மேடையில்... மீனவன் ...
நாடகம் நடிப்பதும் ஏனோ
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 3:44 pm)
பார்வை : 257


பிரபல கவிஞர்கள்

மேலே