நான் சிகப்பு மனிதன் Naan Sigappu Manithan

Tamil Cinema Vimarsanam


நான் சிகப்பு மனிதன் Naan sigappu manithan விமர்சனம்
( Vimarsanam)

இயக்குநர் திருவின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், நான் சிகப்பு மனிதன்.

’நார்கொலாப்ஸி’ எனும் நோயினால் அவதிப்படும் மனிதனாக விஷால் நடித்துள்ளார்.நார்கொலாப்ஸி என்பது ஒரு விதமான உறக்க நோய்.இந்த நோய் விஷாலுக்கு இருப்பதை அறிந்தும் லக்ஷ்மி மேனன் காதலிக்கிறார்.இருவரும் கதையில் மூழ்கி பார்பவர்களையும்,தங்களின் பால் காதலில் கொள்ள வைக்கிறார்கள். காதலுடன் சூப்பராக முதல் பகுதி கதை நகர்கிறது.முதல் பகுதியின் கடைசி பக்கம் ஒரு திருப்பம்.

பழைய சம்பவங்களின் காரணமாக அந்த திருப்பம் நிகழ்கிறது.அப்பழைய சம்பவத்தில் நடித்திருப்பவர்களில் ஒரு சிறப்பு நாயகி,இவர் இப்படியும் நடிப்பாரா? என்று நினைக்க வைக்கிறார்.படத்தை பார்க்கும் அனைவருக்கும் இரண்டாம் பகுதியில் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஜி.வி.பிரகாசின் இசையில் பாடல்கள் அருமை.

நான் சிகப்பு மனிதன் - மிகவும் சிகப்பு அல்ல.

இப்படத்தை பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்து பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-04-11 15:27:17
3.8 (19/5)
Close (X)

நான் சிகப்பு மனிதன் Naan sigappu manithan தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே