சேர்த்தவர் : Dileepan Pa, 15-Nov-17, 7:56 pm

நினைவுப்பாதை கதை - கட்டுரைக்கான போட்டி

நினைவுப்பாதை கதை - கட்டுரைக்கான போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

நினைவுகள் ஒரு மனிதனை முழுமையாக்குபவை. இந்த உலகம் நம்மைக் கைவிட்ட பொழுதுகளில், இந்த நினைவுகளை மீட்டியே நம்மால் உயிர்வாழ முடியும். ஒவ்வொரு தனிமனிதனின் வரலாறும் அவன் நினைவுகளிலிருந்தே உருக்கொள்ளும். அப்படியாயின் ஒருசேரப் பார்த்தால், அவை மனித குலத்தின் வரலாறும்தான்.

குழந்தைப் பிராயத்தின் நினைவுகள், பள்ளி செல்லத் துவங்கிய தருணங்கள், பள்ளி செல்லும் காலங்களில் நிகழ்ந்த சுவாரசியத் தருணங்கள், பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள், கல்லூரிக் காலங்கள், சிறுவயது காதல், பதின்பருவக்காதல், கல்லூரி அழிச்சாட்டியங்கள், நட்பு, காதல், பகை, அழுகை, முதல் வேலை, முதல் சம்பளம், முதல் முத்தம், முதல் குழந்தை என பல நினைவுகளை உள்ளடக்கியதே நம் வாழ்க்கை.

உங்கள் நினைவுகளை எங்களுக்கு சொல்ல வயது ஒரு தடையில்லை. சிறுவயது நினைவிலிருந்து நேற்று நடந்த நிகழ்வு வரை நினைவுகளே. உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை - நினைவுகளை பகிர்ந்து கொள்வதே இந்த போட்டியின் நோக்கம்.

போட்டிக்கு கதை - கட்டுரை என இரண்டும் அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 2 கதைகள் - 2 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

பரிசு விவரங்கள்

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கதைக்கு இரண்டு, கட்டுரைக்கு இரண்டு. அனைத்தும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. அனைத்திற்கும் தலா 1000ரூ பரிசு வழங்கப்படும்.

படைப்புகளை மேலே புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “நினைவுப்பாதை” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

தொடர்புக்கு – 9206706899

ஆரம்ப நாள் : 15-Nov-2017
இறுதி நாள் : 26-Nov-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 05-Jan-2018

நினைவுப்பாதை கதை - கட்டுரைக்கான போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே