மேற்காணும் 'உருமி' படத்தின் பாடலின் இசையோடு லயிக்கும் விதமாய்...
மேற்காணும் 'உருமி' படத்தின் பாடலின் இசையோடு லயிக்கும் விதமாய் யான் எழுதிய பாடல்வரிகள் கீழே :) :) :)
*********************************************************
வாராய் நீ வாராய் !
*********************************************************
எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!
கடல் வென்று வரும் காற்றே!
தழல் கொண்டு வரும் நாற்றே!
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!
வாராய்...! நீ, வாராய்!!
எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!
தடாகம் தனிலே முகிழ்த்தெழும் அன்னம்
என்றுனை நினைக்கின்றேன்!
கலாபமதிலே வலம் வரும் தேவி
இவளென வியக்கின்றேன்!
மழையின் துளிகளாய்...
மனதை மயக்கினாள்!
மழலையைப்போலே...
மகிழ்வில் திளைக்கிறாள்!!
தன் சிரிப்பால், எனைக் கொன்றாள்!
வென்றாள்! சென்றாள்! விழுந்தவன் நானே!!
வாராய்...! நீ, வாராய்!!
கடல் வென்று வரும் காற்றே...
தழல் கொண்டு வரும் நாற்றே...
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!
நாணம் என்பதோர் சின்னம்!
அதில் மூழ்கிப் போகுதுன் கன்னம்!!
ஈரிதழ் குவித்து வலை வீசுகிறாய்
தவிக்கிறதெந்தன் உள்ளம்!
உன்னை கடந்து போக நான் நினைத்தேன்...
எனைக் கடத்திப் போக முடிவெடுத்தாய்!
இதயத்தை எடுத்தாய்! வலியது இல்லை,
மயங்கி களிக்குதென் மனது!!
மென் புன்னகை...தனை உதிர்க்கிறாள்!
அது மது எனும் நிஜந்தனை யாரறிவார்?!
வாராய்...! நீ, வாராய்!!
கடல் வென்று வரும் காற்றே!
தழல் கொண்டு வரும் நாற்றே!
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!
எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!
வாராய்...! நீ, வாராய்!!
வாராய்...! நீ, வாராய்!!
வாராய்...! நீ, வாராய்!!
வாராய்...! நீ, வாராய்!!
*********************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்