கபடம் அவர்கள் வாய் கூசாமல் பொய் சொன்னார்கள் பொருளில்லா...
கபடம்
அவர்கள்
வாய் கூசாமல்
பொய் சொன்னார்கள்
பொருளில்லா
அந்த டப்பாவைப் பார்த்து
உள்ளே
காற்றை வைத்துக்கொண்டு
ஓயாமல்
சொன்னார்கள்
அது ஒரு
காலி டப்பா.
இது டப்பாவுக்கு மட்டுமில்லை
அநேக
ஜிப்பாவுக்கும் -
சேலைக்கும்தான் .
சுசீந்திரன்.