எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள தோழர்களுக்கு இன்று பரபரப்பை ஏற்படுத்தி வரும்...

எழுத்து தள தோழர்களுக்கு
இன்று பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு காணொளி tiger killed a man at delhi இதை யாரும் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் .15 நிமிட காணொளி உயிரின் மதிப்பை உணர்த்திவிட்டது.ஒரு வித பதட்டம் நடுக்கம் ,கண்கள் கலங்கிக் கொண்டே உள்ளது.அந்த மனிதனை காப்பாற்ற அங்கு யாரும் இல்லையா??தோழிகளே ,தோழர்களே அந்த இளைஞன் பட்ட பாடு வார்த்தைகளில் உணர்த்தமுடியாது .அவனுக்குள் எத்தனை கனவுகள் இருந்திருக்கும் ,..விலங்குகளை காப்பாற்ற அமைப்புகள் உள்ளபோது ஒரு மனிதனை காப்பாற்ற இன்னொரு மனிதன் இல்லையா ?அமானுசுயம் எல்லாம் பேய் மற்றும் கட்டுகதைகளுக்குதானா . .இங்கெல்லாம் நடக்காதா?கடவுள் அவதாரம் எல்லாம் பாட புத்தகத்திலும் கதைகளில் மட்டும்தானா? அந்த நொடியில் அவன் எதனை முறை கடவுளை வேண்டியிருப்பான் ..ஆயிரம் வழிபாடு ,பூஜைகள்,பிராத்தனைகள் ,இதெல்லாம் பொய்யா ?உடனே வேண்டினால் நிறைவேறாது போலும் ....இந்த நிகழ்வு ஏன் நடந்தது ? நம் வீரத்தை சோதிக்கவா? அதற்க்கு அந்த இளைஞன் தான் கிடைத்தானா ...என்னால் இதை ஏற்று கொள்ளவே முடியவில்லை ..ஏன் அந்த இளைங்கனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை ..யாரோ ஒருவன்தானே என்றா ?அங்கிருந்த காவலாளிகள் எங்கே போனார்கள்? அந்த இளைங்கனை காப்பாற்ற ஏன் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை ?இதையெல்லாம் யாரிடம் முறை இடுவது ? விஞ்ஞான சாதனை படைகின்றோம் ...இங்கு 5 அறிவு விலங்கிற்கு இளைங்கனை பறிகொடுத்துவிட்டோம் ...India is my country all are my brothers and sisters என்பது பள்ளிக்கூட பிராத்தனையுடன் முடிந்துவிட்டதா ? நமக்கு யாரோ அந்த இளைஞன் அனால் யாரோ ஒருவருக்கு சகோதரன் ..நம் தலைநகரத்தில் வாழும் ஒரு அன்னைக்கு மகன் ...அவனும் ஒரு குடிமகன் ...என்னால் ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது..இவ்வாறு எனு நடந்தாலும் இதுதான் முடிவாக இருக்குமா? பதில் தராத கேள்விகள் என்னை மேலும் மேலும் கலங்க செய்கின்றது...

பதிவு : vinoliya Ebinezer
நாள் : 26-Sep-14, 10:22 pm

மேலே